Recent News

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைக்க வலியுறுத்தி, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“சியாட்டில் தமிழர்கள்” என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் விவசாயத்தை காப்பாற்றக் கோரியும், விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும், என்று அவர்கள் வலியுறுத்தினர்.

காவரிக்காக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது, விவசாயம் மற்றும் விவசாயிகள் மீதான தமிழர்களின் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.