Recent News

இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு. அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் உற்சாக வரவேற்பு அளித்தார்.

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதற்கட்டமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.

View image on TwitterView image on Twitter

Narendra Modi

@narendramodi
Landed in Stockholm. I thank Prime Minister Stefan Löfven for the warm welcome at the airport. @SwedishPM

1:21 AM – Apr 17, 2018
12.9K
3,199 people are talking about this
Twitter Ads info and privacy

அப்போது, அங்கு திரண்டிருந்த சுவீடன் வாழ் இந்தியர்களும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சுவீடனில் இன்று நடைபெறும் இந்தோ-நார்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். அந்நாட்டு அரசரையும் சந்தித்து பேச உள்ளார்.

சுவீடன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, நாளை முதல் 20-ஆம் தேதி வரை லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார். பின்னர் ஜெர்மனி செல்லும் அவர், அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசுகிறார். வரும் 21-ஆம் தேதி மோடி நாடு திரும்புகிறார்.