Recent News

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சாஷில் நமோஷி என்பவர், பத்திரிகையாளர் சந்திப்பின்போது கதறி அழுத சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

காலாபர்கியைச் சேர்ந்த பாரதிய ஜனதா பிரமுகரான சாஷிர் நமோஷி, சட்டமேலவை உறுப்பினராக இருந்தவர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், தேர்தலில் போட்டியிட அவருக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

இதனை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமக்கு வாய்ப்பு வழங்கப்படாது குறித்து, சாஷில் நமோஷி நேற்று செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அப்போது, கட்சிக்காக தாம் செய்த தியாகங்களை பட்டியலிட்ட அவர், திடீரென மனமுடைந்து கதறி அழத் தொடங்கினார்.

இதனை கண்ட பத்திரிகையாளர்கள் அதிர்ச்சிடையந்தனர். உடனடியாக, அவரது ஆதரவாளர்கள் சாஷில் நமோஷியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். எனினும், அவர் நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தார்.