Recent News

சென்னையில் போலீசாரின் வாகனம் மீது கற்கள் வீசி தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாம்பலம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையினர் ரோந்து வாகனத்தின் மீது கற்கள் வீசி தாக்கியதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் திருவல்லிகேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது.

நாம் தமிழர் கட்சி உறுப்பினரான அவர், ஐபிஎல் போட்டியை தமிழகத்தில் தடை செய்யகோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததைக் கண்டித்து போலீசாரின் வாகனத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கார்த்திக்கை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.